2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா நிராகரித்த பிரபாகரனின் தாயாருக்கு மலேஷியா ஒரு மாத கால விஸா வழங்கியது - சிவாஜிலிங்கம்

Super User   / 2010 ஏப்ரல் 17 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


EXCLUSIVE இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட  பிரபாகரனின் தாயாருக்கு மலேஷிய அரசாங்கம்  மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாத கால விஸா வழங்கியுள்ளது.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தாயாரான பார்வதி அம்மையார் நேற்று இரவு இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்திய அரசாங்கம் ஆறு மாதகால விஸாவை பார்வதி அம்மையாருக்கு வழங்கியிருந்த போதிலும்கூட ஏன் அனுமதி மறுத்தது என்பது தெரியவில்லை. இரவு 10.15 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். விமானத்திலிருந்து இறக்காமல் அப்படியே 10.45 மணியளவில் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

நீங்கள் இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதற்கும்,பிரபாகரனின் தாயாரின் இந்திய வருகைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா என தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.இவ்விரண்டுக்கும் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

பிரபாகரனின் தாயாரை இலங்கையிலிருந்து மலேஷியா செல்வதற்காக சிங்கப்பூர்வரை கே.சிவாஜிலிங்கம் அழைத்துச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .