2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்புளுவன்சா வைரஸ்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாக அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக IDH காய்ச்சல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவிக்கையில், தற்பொழுது கூடுதலாக பரவி வருவது இன்புளுவன்சா B என்ற வைரஸ் ஆகும். இது உட்புகுந்தால் காய்ச்சல் ,உடல்வலி, முக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும் என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X