2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’இராணுவப் பயிற்சிகள் இராணுவ மயமாக்கல் அல்ல’

Editorial   / 2021 ஜனவரி 20 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மகேஸ்வரி விஜயனந்தன்

இராணுவப் பயிற்சிகளை வழங்கும் அமெரிக்கா, பிரித்தானிய  உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இது ஒரு யோசனை மாத்திரமே என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் '18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க அரசாங்கம் அனுமதி வழங்குமா? இதிலிருந்து நாடு மெதுவாக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றதா?' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பதிலளித்துக் கருத்துரைத்த அவர்,

'அந்த யோசனை குறித்து, ஆராய்வது நாடொன்றின் சுற்றுச்சூழலையும் அடிப்படைப் பின்னணிகளையும் அரசியல் சூழ்நிலை நாட்டின் நிர்வாகத்துக்குள் இருக்கும் தொடர்பு என்பவற்றை ஆராய்ந்து, அதற்கான தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதில் தவறில்லை' என்றார்.

ஏனெனில், உலகில் அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் கூட, பிரபலமாக இராணுவப் பயிற்சி செயற்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அதை எதிர்ப்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கும் நடவடிக்கை கூட, சில ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படுகின்றது எனத் தெரிவித்த அவர், 
எனவே, இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையைச் சுலபமாகப் பயன்படுத்த வேண்டாம். இராணுவப் பயிற்சி வழங்குவது, இராணுவ மயமாக்கல் நடவடிக்கை இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .