2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரண்டரை வருடத்துக்கு ஐ.தே.க தனித்து ஆட்சி

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு  அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க விருப்பமுள்ள கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைக்குமாயின் அமைச்சுப் பதவிகள் 30 வரையும், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இதுவரையில் தனியான அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்​லையெனவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இன்றும் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் தானும் கலந்துக்​கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .