2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு ஜப்பான் உதவி

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு ஜப்பானின் உதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் தொடர்பில், ஆராயவுள்ளதாகவும், இதற்காக ஜப்பான் அரசின் உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்றைய தினம் டோக்கியோவின் ஷினகாவாஹில் அமைந்துள்ள, நவீன கழிவு முகாமைத்தவு மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்வாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .