2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி

Editorial   / 2018 மே 16 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு இணக்கம் தெரிவித்த கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாக, பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளம் எஞ்சியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், இலங்கை வெளிவிவகார அமைச்சர், திலக் மாரப்பனவை சந்தித்த தான் இந்த விடயங்களில் இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக, பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

"நான் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி அமைச்சர் மாரப்பனவை சந்தித்தேன், சர்வதேசத்துக்கு இலங்கை நிறைவேற்றவேண்டிய கடமைகள் தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடினேன். எனினும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன. அந்த விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளது" என மார்க் பீல்ட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் செயற்பாட்டில் ஒருசில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பபட்டுள்ளதாகவும், எனினும் மனித உரிமைகள் விடயத்தில் முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டிய நாடு இலங்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில்,  பிரித்தானியானியாவின் இணை அனுசரணையுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் சிறப்பாக செயற்பட வேண்டுமெனவும் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .