2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை - சவூதி அரேபியா அரசுகளுக்கு இடையில் ஹஜ் உடன்படிக்கை

Super User   / 2010 மே 18 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சருக்கும் இடையில் ஹஜ் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்று திங்கட் கிழமை இடம்பெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி  தலமையில்  மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம் நவவி அடங்கிய ஹஜ் தூதுக்குழு ஒன்று சவூதி அரோபியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

கடந்த வருடம் இலங்கையிலிருந்து ஹஜ் செல்வதற்கு 2500 பேருக்கே விசா வழங்கப்பட்டிருந்தது. எனினும் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்திருப்பதன் காரணமாக அங்குள்ள மக்கள் பலர் ஹஜ் செல்வதற்கு தயாராக இருப்பதன் காரணமாக, இம்முறை 8500 மேற்பட்ட விசாக்களை வழங்கும் படி இத்தூதுக்குழு சவூதி அரோபிய அரசிடம் வேண்டியிருந்தனர்.  அதனடிப்படையில் 8000 மேற்பட்ட விசாக்களை வழங்குவதாக சவூதி அரோபிய அரசு உறுதியளித்துள்ளதாகவும் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரியவருகின்றது.

இக்குழுவின் சவூதி அரோபியாவுக்கான விஜயத்தின் போது சவூதி அரசின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான ஹஜ் பொறுப்பாளரையும் சந்தித்து, இலங்கை ஹஜ் குழுவினர் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி, அதற்கு தீர்வு கண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(R.A)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .