2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இழப்பீட்டை அறவீடு செய்யும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர் உயிரிழந்தால், அவரது உறவினர்களுக்கு ஏற்படும் இழப்புகளை அறவீடு செய்வதற்கான புதிய சட்டமூலமொன்று இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் தலதா அத்துகோரளவால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

‘நபர் ஒருவர் உயிரிழப்பதால் ஏற்படும் இழப்புகளை அறவீடு செய்தல்’ என்னும் பெயரில் இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலத்துக்கு அமைய, சட்டவிரோதமாக , கவனயீனமாக, பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்த முடியாமை, கைவிடுதல் போன்றக் காரணங்களால், நபர் ஒருவர் உயிரிழந்தால் அந்த நபரின் உயிரிழப்புக்கு காரணமாகும் நபர் அல்லது அவரது உறவினர்களிடமிருந்து  உயிரிழந்தவரின் உறவினர்கள் தமக்கு ஏற்படும் இழப்பீட்டை இந்த புதிய சட்டமூலம் ஊடாக அறவீடு செய்யலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X