2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’இ.தொ.காவுக்கு இரண்டு எம்.பிகள்; எங்களிடம் 6 எம்.பிகள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குறுதியளிக்கப்பட்டது போல தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு தேசியப் பட்டியலை வழங்கும் அதிகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே இருப்பதாக, அக்கூட்டணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்பவில்லை. இதுத் தொடர்பில் சஜித் எடுக்கும் தீர்மானத்துக்கு இணங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ரமடான் ஹோட்டலில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத் அவர்,  ஐக்கிய மக்கள் சக்தியை நாமே உருவாக்கினோம். அந்தக் கூட்டணியோடு நாம் நீண்டத் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதனால் சில விடயங்களை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. தேசிய பட்டியல் விவகாரத்தால் எமது பிரதான நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி என்கிறக் கட்சி இப்போது இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவார்களெனவும் கூறிய அவர், ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட கூட்டணியினருக்கு தமிழர்கள் அல்லாத முஸ்லிம், சிங்களவர்களும் வாக்களித்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பிரதானக் கூட்டணி  தமிழ் முற்போக்குக் கூட்டணியே எனவும் கூறிய அவர்,  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெறும் இரண்டு எம்.பிகளையே பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 6 எம்.பிகள் கிடைத்துள்ளனர் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .