2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உரிமையாளரை கொன்றதாக சேவல் மீது வழக்கு

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத்:

தெலுங்கான மாநிலகத்தில் உரிமையாளரைக் கொன்றதாக சேவல் மீது பொலிஸார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர். அந்த சேவலும், பொலிஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் சேவல் சண்டை போட்​டிகள் சட்டவிரோதமான முறையில் நடத்தப்படுகின்றன. பொலிஸாரின் கண்களில் பட்டுக்கொள்ளாமல் ஒன்று ​சேரும் சேவல் உரிமையாளர்கள் பலரும் பல இலட்சம் ரூபாய் பந்தயம் கட்டி இந்த போட்டிகளை நடத்துகின்றனர்.

இந்த பந்தையத்துக்காக சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகளை கட்டுவார்கள் இரண்டு சேவல்களும் ஆக்ரோசமாக சண்டையிடும். அதன்போது, கத்திகளால் பலத்த காயங்களும் ஏற்படக்கூடும். இதில், சில நேரங்களில் சேவல்கள் பரிதாபகரமாக இறந்துவிடுவதும் உண்டு.

ஆனால், தெலுங்கான மாநிலம் கரீம்நகர் பகுதியில் சட்டவி​ரோதமாக ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்தியது. இ​தில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சேவல் சண்டைக்கு தனது சேவலுடன் சென்றிருந்தார்.

இந்த பந்தயத்தில் 16க்கும் மேற்பட்டவர்கள் சென்றிருந்தனர். தன்னுடைய சேவலை தயார்படுத்திய ​சதீஷ், சேவலின் கால்களில் பளபளக்கும் கூர்மையான கத்திகள் இரண்டையும் கட்டியுள்ளார்.

அந்த சேவல் தப்பியோட முயன்றுள்ளது. எனினும், அதனைபிடித்து மறுபடியும் கத்திகளை கட்டியுள்ளார். ஆனால், அவரது பிடியிலிருந்து தப்பிய சேவல், பலமுறை சதீஸ் கத்திகள் கட்டப்பட்டுள்ள கால்களைக் கொண்டு தாக்கியுள்ளது. இடுப்பு பகுதியில் தாக்கியமையால், கடுமையாக இரத்தம் பீரிட்டுள்ளது.

அங்கிருந்தவர்கள் அவரை, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

சம்பவத்தை அடுத்து கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு சேவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து. அதன்கால்களில் கட்டப்பட்டிருந்த கத்திகளை அவிழ்த்து, சேவலின் காலொன்றை கயிற்றால் கட்டி, பொலிஸ் நிலையத்தின் முன்பாக கட்டிவைத்துள்ளனர்.

சேவலையும் கத்திகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .