2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உளுந்து இறக்குமதித் தடையை மீள்பரிசீலனை செய்ய உத்தரவு

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு உளுந்து முக்கியத்துவம் பெறுவதால், உளுந்து மீதான இறக்குமதித் தடையைத் தளர்த்துமாறு, யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் எழுத்துமூலக் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உளுந்து இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், தமிழர்களின் பிரதான உணவு வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதை யாழ். வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து, உளுந்து மீதான தடையை மறுபரிசீலனை செய்வதற்குக் கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதியின் செயலாளருக்குப் பிரதமர் இன்று காலை ஆலோசனை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .