2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊடகக் கலரியும் இழுத்துப் பூட்டப்பட்டது

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் மாதத்துக்கான முதலாவது வார நாடாளுமன்ற அமர்வு, 3ஆம் திகதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய அமர்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கான தீர்மானம், அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020 நிதியாண்டுக்கான தேவைக்காக, நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்தை நவம்பர் 12ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்களுக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதையடுத்தே, நவம்பர் 3ஆம் திகதியன்று முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டுஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தை அடுத்து, நாடாளுமன்றத்தில் மக்கள் கலரிகளும் சபாநாயகர் கலரியும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .