2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: ’நீதிமன்றத்துக்கு போகமுடியாது’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில், நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாதெனத் தெரிவித்த மஹிந்த அணியின் எம்.பியான சுசில் பிரேமஜயந்த, பிரிதொரு கட்சிக்கு சென்றனர் என்பதற்கு, பத்திரிகைச் செய்திகளே இருக்கின்றனவே தவிர, சாட்சியங்கள் இல்லையென்றும் கூறினார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில், இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிய பின்னர் எழுந்த சர்ச்சையின் போது கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த சுசில் எம்.பி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிப்பேராணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று இருக்கின்றதெனவும்  நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களே தெரிவு செய்கின்றனர். தவிர, நாடாளுமன்றம் தெரிவு செய்யவில்லை என்றுக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து ஒருவரை நீக்கினால், ஒரு மாதகாலத்துக்குள் அவர் நீதிமன்றத்துக்குச் செல்லமுடியும். எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில், அரசலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளையில் குறிப்பிடவில்லை என்பதுடன், எதிர்க்கட்சி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்குச் செல்லமுடியாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, வேறு கட்சியொன்றில் உறுப்புரிமையைப் பெறுவதானால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இல்லாமல் போகாதென்றும், சுசில் பிரேமஜயந்த எம்.பி கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் லக்‌ஷமன் கிரியெல்ல, “மொட்டுச் சின்னக் கட்சியில் நீங்கள் உறுப்புரிமையைப் பெற்றுள்ளீர்களா?” என வினவியபோது, “தான் பெறவில்லை” என, சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.

எனினும், சுசிலின் கூற்றை மறுத்த ஆளுங்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 50 அல்லது 60க்கும் மேற்பட்டவர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் (தாமரை மொட்டுச் சின்னம்) அங்கத்துவம் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களை ஏமாற்றும் நடவடிக்கையா? என்றும் வினவினார். அதற்கு, சுசில் பிரேமஜயந்த எம்.பி, எந்தவொரு பதிலையும் அளிக்காது சமாளித்துவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X