2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சா உற்பத்திக்கு இராணுவத்தினரை பயன்படுத்த நடவடிக்கை

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினரின் உதவியுடன் உள்ளூர் மருத்துவ உற்பத்திகளுக்காக கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படயிருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இன்று (13) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

”எமது நாட்டில் பாரம்பரிய வைத்திய முறைகளுக்காக கஞ்சா, அபின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பாரம்பரிய வைத்திய முறைகளைக் கையாளும் வைத்தியர்கள் என்னிடம் முறைப்பாடு தெரிவித்தார்கள்.

ஆதலால், இராணுவத்தினரை பயன்படுத்தி கஞ்சா உற்பத்தியினை மிகப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்பதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X