2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கிழக்கு முனையத்தில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு’

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், இந்தியாவின் ஆக்கிரமிப்பையே எடுத்துக்காட்டுவதாக, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை அவர் ராமாயாணத்துடன் தொடர்படுபடுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர், இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை மாற்றி அமைக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது போல, அதன் ஒரு கட்டமாகவே, இதனைப் பார்ப்பதாகவும் இது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு கட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏதேனும் வகையில் துறைமுக விடயத்தில் வெற்றிபெற்றால், ராமாயணத்தில் இராவணனை ராமர் வென்றது போலாகிவிடும் என்றும் பாரத நாட்டால், மீண்டும் ஒருமுறை இலங்கை தோல்வியடையச் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை முன்னேற்றம் அடைவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .