2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’காவி, வெள்ளை ஆடைகளை அணிந்தோர் தீ மூட்ட முயற்சி’

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அழகன் கனகராஜ்

ஆயுதங்கள் யார் வீட்டிலிருந்து எடுத்தாலும் அவர்களின் இனங்களை சுட்டிக்காட்டவேண்டிய அவசியமில்லையெனத் தெரிவித்த பிரதியமைச்சர் நளின் பண்டார, காவியுடை அணிந்தோரும், வெள்ளை ஆடைகளை அணிந்தோரும் இல்லாத தீயை மூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்றார்.

மாவனெல்லை, புத்தளம் ஆகிய பிரதேசங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சபையில் நேற்று (23) இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் மத்தியில் கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், கேகாலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வீட்டிலிருந்தும் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. ஆயுதங்கள், முஸ்லிம்களின் வீட்டிலிருந்தா? சிங்களவர் வீட்டிலிருந்தா அல்லது தமிழர்களின் வீட்டிலிருந்தா ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன என்பது பிரச்சினையில்லை. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமைதான் பிரச்சினையாகும் என்றார்.

அவைத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எனினும், காவியுடை அணிந்தோரும், வெள்ளை உடையை அணிந்தோரும் இல்லாத தீயை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்றுத் தெரிவித்த அவர், அவ்வாறு வெள்ளை உடையணிந்தவர்கள்தான், அடுத்தவரின் புத்தகத்தை தன் பெயரில் அச்சடித்துகொண்டனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .