2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

​கை - மொட்டு கூட்டணி; ‘பேச்சுவார்த்தை வெற்றி’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் (கை சின்னம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் (தாமரை மொட்டு சின்னம்) இடையிலான முதலாவது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாக, சு.கவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற கூட்டணி தொடர்பான கலந்துரையாடலில், சுதந்திரக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷமன் பியதாச, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த தயாசிறி எம்.பி, இன்றைய (நேற்று) கூட்டத்தில், இரு கட்சிகளுக்கு இடையிலான கொள்கை உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதியன்று, தங்களது இரண்டாவது சுற்றப் பேச்சுவார்த்தை தொடருமென்றும் கூறினார்.

இதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரது தலைமையில், பல்வேறு கட்சிகளுடன் சந்திப்பு நடைபெற்றிருந்ததெனத் தெரிவித்த அவர், இதுவே சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுனவுக்குமான முதலாவது உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை என்றுக் கூறினார்.

தேர்தலை இலக்கு வைத்து, இந்தக் கூட்டணி அமைக்கவில்லை எனவும் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் உள்ளிட்ட கொள்கைகளுக்கு எதிராகவே இந்தக் கூட்டணி அமைக்கப்படுவதாகவும் கூறிய அவர், கூட்டணியின் தலைவர் எந்தக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அதனை ​எதிர்காலத்தில் தீர்மானிப்போம் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X