2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொம்பனித்தெரு வீடு இடிப்பு;எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை

Super User   / 2010 மே 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் அமைந்திருந்த வீடுகளை அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை நண்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குடியிருப்பு பாதுகாப்பு மன்றத்தின் முக்கியஸ்தர் முஹம்மத் சராப்டீன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களே கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அகற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு இதுவரையில் அரசாங்கத்தால் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், தற்போது இவர்கள் வீதியோரங்களில் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களை இதுவரைக்கும் எந்தவொரு ஆளும் கட்சி முக்கியஸ்தர்களும் வந்து சந்திக்காத நிலையில், கொழும்பு மாநகர சபையும் இந்த மக்களுக்கு எந்தவிதமானதொரு உதவிகளையும் செய்யவில்லை என்றும் சராப்டீன் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கொம்பனித்தெரு மியூஸ் வீதியில் அமைந்திருந்த 21 வீடுகளை சட்டவிரோத வீடுகள் என்று கூறி நகர அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

You May Also Like

  Comments - 0

  • sheen Friday, 14 May 2010 09:16 PM

    (operation sidewalk) ஒபரேசன் சைட்வாக் என்று அங்கும் வந்து அவர்களை கூடாரங்களில் இருந்து தூக்கிக்கொண்டு போய்விடாமல் இருக்கவேண்டும், ஆண்டவனே, ஆண்டவனே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .