2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோட்டாவுக்கு எதிராக நடவடிக்கை: 15வரை முடியாது

Editorial   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த ​நவம்பர் மாதம் 29ஆம் திகதி பிறப்பக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்க, நீதிமன்றம் நேற்று (06) உத்தரவிட்டது.  

தனக்கெதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்குமாறு கட்டளை பிறப்பிக்கக் கோரி, கோட்டாபயவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, ​நேற்றையதினம் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளையிட்டது.

இம்மாதம் 15ஆம் திகதி வரை மட்டுமே, இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பீ.தெஹிதெனிய (தலைவர்) மற்றும் நீதியரசர் ஷிரான் குணரத்ன ஆகியோரால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே, இடைக்காலத் தடையுத்தரவு, 15 வரை நீடிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆட்சேபனை இருப்பின், அன்றைய தினத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலுக்கு, நீதியரசர் குழாம் அறிவித்தது.

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியம் தொடர்பில், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், தனக்கெதிரான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அந்த விவகாரம் சிவில் கொடுக்கல் - வாங்கல் என்பதால், விசாரணைகளைத் தற்காலிகமாகக் கைவிடுமாறும், கோட்டாபய ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .