2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சகலரும் பிரிவினைகளின்றி ஒன்றுபடவேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பிரிவினைகள் மற்றும் சந்தேகங்களின்றி நம்பிக்கையுடன் அனைவரும் சமூகத்தில் வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வதனூடாகவே நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் இன அடிப்படையில் ஏற்படும். சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைக் காணலாம்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும், “வேற்றுமையை இல்லாதொழித்து அனைவரும் புரிந்துணர்வுடனும், நம்பிக்கையுடனும் செயற்படும் சமூகமொன்றை எமது நாட்டில் கட்டியெழுப்புவதற்கு சகலரும் பிரிவினைகளின்றி ஒன்றுபடவேண்டும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் நேற்று இடம்பெற்ற வண. கிரம விமலஜோதி தேர்ருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமனப் பத்திரிகையை வழங்கும் புண்ணிய நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒட்டுமொத்த பெளத்த சமூகத்தினதும் நன்மைகருதி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விரிவான குறிக்கோளுடன் செயற்படும் வண. கிரம விமலஜோதி தேரரின் புத்த சாசனத்துக்கான மற்றும் சமூக செயற்பணியை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, அன்னார் தமது கடமைகளை மிகவும் பொறுப்புடன் நிறைவேற்றி முன்னுதாரணமான செயற்படும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.  

விசேட சமய பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு பௌத்த சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், சிறந்த அறிவும், ஒழுக்கமும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அன்னாரின் அர்ப்பணிப்பினையும் ஜனாதிபதி பாராட்டினார்.

உன்னதமான பிக்கு சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் வண்ணம் பிக்குகள் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிறந்த நடத்தையும், கௌரவமும் கொண்ட பிக்குமாரே இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்ததுடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .