2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல்: ஐவர் இடைநிறுத்தம்

Editorial   / 2021 பெப்ரவரி 26 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரதான பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் இறுதி ஆண்டு சட்ட மாணவரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவன் தாக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X