2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சட்டமா அதிபர் அங்கிகரித்தாரா?’

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா, அஜித் சிறிவர்தன 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்ட 50 திருத்தங்களும், சட்டமா அதிபரால் அங்கிகரிக்கப்பட்டுள்ளனவா எனக் கேள்வியெழுப்பிய, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் டினேஷ் குணவர்தன, இந்தத் திருத்தங்களின் காரணமாக, நிலையற்ற முடிவு பெறப்படுமெனவும் குறிப்பிட்டார்.   இந்தத் திருத்தம் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக, செயற்குழு மட்டத்தில், குறித்த 50 திருத்தங்களும் கலந்துரையாடப்பட வேண்டுமெனவும், திருத்தங்கள், நேற்றுக் காலையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்ததாகவும், அவை முன்னரேயே வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.  

“இது, வரலாற்றுரீதியான நிகழ்வு. இவ்வாறான விடயம், முன்னர் நடைபெற்றது கிடையாது. திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், முன்னரே அவர்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.  

முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டமைக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அரசாங்கத்துடன் அக்கட்சி, ஏற்கெனவே கலந்துரையாடியிருக்கலாம் என்ற அடிப்படையில், அவர்கள் இதை அறிந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். “ஜே.வி.பி தலைவருடன் நான் ஒத்துப் போகவில்லை. திருத்தங்கள் குறித்து, அரசாங்கத்துடன் அவர்கள் கலந்துரையாடினர். அதனால் அவர்கள் அறிவர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று காலையிலேயே அவற்றைப் பெற்றுக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X