2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமிக்ஞை மொழியை அங்கிகரிக்க ஏற்பாடு

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமிக்ஞை மொழியை அங்கிகரிப்பதற்கான, ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.  

சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சமிக்ஞை மொழியானது’ விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக, அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட மொழியாக, சமிக்ஞை மொழியை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், பிரேரிக்கப்பட்டுள்ள சமிக்ஞை மொழி சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .