2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகாதாரச் சேவை ஸ்தம்பித்தது

Editorial   / 2018 மே 17 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தினால், நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட எவ்வித வைத்திய சேவைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வெளி நோயாளர் பிரிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சை அனுமதிகள், அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் உளவியல் பிரிவு ஆகிய சேவைகள் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .