2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“சைட்டத்துக்கு தீர்வுகாண புதிய ஆணைக்குழு”

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டம் பிரச்சினைக்கான தீர்வினை ஆராய ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று(12) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவராக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக விசேட வைத்தியர் சாரத கன்னன்கர தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் 16  திகதி முதல் 28 ஆம் திகதி வரை குறுத்த ஆணைக்குழு செயற்படவுள்ளதுடன், நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆணைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

சைட்டம் நிறுவனத்தின் ஆரம்பம், வரலாறு மற்றும் நிர்வாகம், மருத்துவ கல்வி மற்றும் ஒழுங்கு முறைக்கான தரநிலை சட்டம், சைட்டம் பிரச்சி​னையால் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆணைக்குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் , பெற்றோர், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள், விஞ்ஞான பீட மாணவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .