2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவளை பல்கலையில்; சிபாரிசுகளுக்கு அனுமதி

Editorial   / 2018 மே 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டம் வைத்திய பீட மாணவர்களை கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துக்கு உள்வாங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய, சில சிபாரிசுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள்ளார்.  

குறித்த சிபாரிசுகளை செயற்படுத்துவதற்காக சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வி அமைச்ச விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சிபாரிசுகள்

2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதியிலிருந்து 2017ம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி வரை வைத்திய கற்கைகளை மேற்கொள்வதற்காக சைட்டம், நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுள், அரச பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு உள்வாங்குவதற்கு அவசியமான அடிப்படை தகைமைகளை கொண்டுள்ள மாணவர்களை மாத்திரம் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துக்கு உள்வாங்கிக் கொள்ளல்.

குறித்த மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதற்கு அவசியமான தகைமைகள் மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிப்பதற்கு கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபைக்கு அதிகாரத்தினை வழங்குதல்.

கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்ற சைட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுள், கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழகத்தின் வைத்திய பட்டத்தினை வழங்குதல்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X