2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கபோவதில்லை’

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 05:02 - 1     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எம்.கிருஸ்ணா

தமிழ் முற்போக்குக் கூட்டணியானது, ஜனநயகத்தை மதிக்கும் சிறந்த கொள்கையையுடைய ஒரு கட்சி என்பதால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்வாசல் வழியாக வழங்கப்பட்ட பிரதமர் பதவியை எதிர்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்றும், கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக, மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில், ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில், இன்று (9) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், மக்கள்  வழங்கிய ஆணையின் பிரகாரம், இருந்த அரசாங்கம் கலைக்கப்பட்டு, ஜனநாயகத்துக்கு எதிராக புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதென்றும் அதை ஜனாநாயகக் கொள்கையுடைய தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்கபோவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தாகவும் இதன்போது, ஜனாதிபதி முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் தாம் ஏற்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சகலரும் ஒடி,ஒடி வாக்கு சேகரித்தோம். இதை நீங்கள் அறிவீர்கள்.  இது தனி ஐக்கிய தேசிய கட்சியல்ல. நீங்கள் முரண்பாடுகள் தொடர்பில் எம்மோடு ஏன் கலந்துரையாடவில்லை என்று, ஜனாதிபதியிடம் நாம் கேட்போது அவரிடமிருந்து பதிலெதுவும் இல்லை” என்றார்.

மேலும், “தமிழ் முற்போக்குக் கூட்ணியின் செயற்பாடுகளுக்காகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்” என்றும்  பெரும்பான்மையினத்தவர்களும் தம்மோடு இணைவதற்கு  ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • Bawani Friday, 09 November 2018 04:38 PM

    Neenga solrathu sari. Nangalum ungalodu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .