2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதிக்கு கென்யாவில் மகத்தான வரவேற்பு

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்றுவரும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக, கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்றிரவு (13) நைரோபியிலுள்ள ஜொமோ கென்யாட்டா (Jomo Kenyatta) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இதன்போது, கென்ய நாட்டின் விசேட பிரதிநிதிக் குழுவினரால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினருக்கு  மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் கென்ய நாட்டு கலாசார முறைப்படி, ஜனாதிபதிக்கு வரவேற்பு அளித்தனர்.

கென்ய நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவின் (Uhuru Kenyatta) அழைப்பின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது  கூட்டத் தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையிலும், சுற்றாடலை பாதுகாப்பதற்கு பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர் என்ற வகையிலும், ஜனாதிபதியின்  பங்குபற்றுதலானது மாநாட்டின் சிறப்பம்சமாக அமையுமென, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் இன்று (14) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X