2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி ஏன் அப்படிக் கேட்டார்?

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய பதவிக்காலம் தொடர்பிலான வியாக்கியானத்தை, ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்திடம் கேட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம், விளக்கமொன்றை நேற்று (11) அனுப்பிவைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இருவேறு வகையான கருத்துகள் சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன.  

“இதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடன், ஜனாதிபதி, தமது பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.  

“அரசமைப்புச் சட்டத்தில், ஜனாதிபதி ஒருவருக்கு அவ்வாறு விளக்கம் கோருவதற்கான அதிகாரம் காணப்படுவதுடன், இதற்கு முன் பதவிவகித்த ஜனாதிபதிகளும் தமது பதவிக்காலம் தொடர்பாக இவ்வாறு உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளனர்.   

“இது ஜனநாயக ஆட்சியமைப்பின் அரசியலமைப்பில் காணப்படும் ஒரு விசேட அம்சமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .