2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருகிறார் என, அறியமுடிகிறது.  

இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவார் என்றும் அறியமுடிகிறது.  

இந்நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் ரவி கருணாநாயக்க, இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.  

அதனடிபடையில், வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் கையளிப்பார் என்றும் அறியமுடிகிறது.  

தான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும், ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்து கொள்வதற்கு தீர்மானிப்பாராயின், அதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுவார் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.  

இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,   ஏற்கெனவே அறிவுறுத்திவிட்டார் என, ஆளுங்கட்சியைச் சேர்ந்த  சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், அண்மைய காலங்களில் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .