2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டிரான் அலஸ் விவகாரம்: நீதிபதி விலகினார்

Editorial   / 2019 ஜனவரி 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி தெரிவித்துள்ளார்.

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும் எனினும் சாட்சி விசாரணைகளின் போது வெளியாகிய பல விடயங்கள் காரணமாக தனிப்பட்ட ரீதியில் வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி நேற்று (11) அறிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையை கொழும்பு, இலக்கம் - 05 மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியின் முன்னிலையில் முன்னெடுக்குமாறும் நேற்று  உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 29ஆம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X