2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேசியப் பட்டியல் தொடர்பில் இன்றும் தீர்மானமில்லை

Editorial   / 2020 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர் தலைமையின் கீழ் கொண்டுவர செயற்குழு முடிவு செய்துள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(14) முற்பகல் செயற்குழு கூடிய போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுத் தேர்தல் தொடர்பில் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திய அனைவரும், கட்சிக்கு ஒரு புதிய தலைமையை உருவாக்க, கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.

அதன்படி, தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும் அதற்காக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை அளித்து, தேசிய அபிலாஷைகளை அங்கீகரிக்கும் புதிய இளைஞர் தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் செயற்குழு ஒப்புக் கொண்டுள்ளது.

அதன்படி,  நாட்டிற்கும் கட்சிக்கும் ஏற்ற ஒரு இளைஞர் தலைமை அடையாளம் காணப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, கட்சியின் இளம் தலைவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்க பொறிமுறை அமைக்கப்படும்.

தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்கள் பெற்ற வெற்றியை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு,  ஒரு இளம் தலைவருக்கு தலைமைத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இன்றைய தினமும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .