2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தூண்டிவிட்டு இப்போது விழிபிதுங்கி நிற்கிறது’

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியில் இருந்த போது, ஒவ்வொரு நாளும், தாம் தூண்டித் தூண்டி, வளர்த்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து,  விடுபட முடியாமல்,  அரசாங்கம்,  இன்று விழிபிதுங்கி நிற்கிறது எனத் தெரிவித்த,  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன், வினை விதைத்தவன்,  வினையையே அறுப்பான் என்றார். 
 
கொழும்பு துறைமுக  கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த  அரசாங்கம் திட்டமிட்டபோது, அதை எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய அரசாங்கம் எதிர்த்தது. இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

'இது இவர்களது இனவாதப் பரம்பரை பழக்க வழக்கமாகும்.  தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்தை, புதிய அரசியல் அமைப்பாகக் கொண்டு வர முயற்சி செய்த போது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாதத் தீயைப் பற்ற வைத்தவர்கள் இவர்கள். இவ்வாறானவர்களை ஒதுக்கித் தள்ளி, ஆரம்பித்த பணியை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை' என்றார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .