2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’தம்மிக பாணியை ஊக்குவிக்கவில்லை’

Editorial   / 2021 ஜனவரி 20 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் என தெரிவித்துத் தயாரிக்கப்பட்டுள்ள 'தம்மிக பாணியை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, இந்தப் பாணி குறித்த சரியான பதிலை, இச்சந்தர்ப்பத்தில் எம்மால் தரமுடியாது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தம்மிக பாணி குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டன. மருத்துவ ரீதியான பரிசோதனைக்காக 2 வாரங்கள் அனுமதி கிடைத்துள்ளது, இந்நிலையில், இதுவரை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை என்றார்.

இந்தப் பாணியை அருந்திய இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட சிலருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களில் சிலரும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளனர். எனவே, இந்த வைரஸைக் குணப்படுத்துவதற்கான தெளிவான சான்றுகள் எங்கும் இல்லை.

அதாவது, நீங்கள் தடுப்பூசி போட்டாலும் அப்படித்தான். அதற்கமையப் பார்த்தால், இந்தப் பாணி சிறந்தது. இந்தப் பாணி குறித்த மேலும் பல தகவல்களைத் தேட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் இதை ஊக்குவிக்கின்றது என நான் நினைக்கவில்லை என்றார்.
 'எந்தவொரு நபரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். எது எவ்வாறாயினும், அரசாங்கம் இதைப் பயன்படுத்துமாறு, இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X