2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீவிரமான கண்காணிப்புக் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முன்னநகர்த்தப்படும் பொறுப்புக் கூறல், இழப்பு விலக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான இடங்கள் குறித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பச்லெட்டின் மதிப்பீடு குறித்து, காத்திரமாமான முக்கியத்துவத்தை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் குறித்த தனது கடமைப்பாடுகளை, ஐரோப்பிய ஒன்றியம் மீள உறுதிப்படுத்தியுள்ளது. 

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், மனித உரிமைகள் சபை நடைமுறைக்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக ஆதரிக்காமையை அடுத்து, தாங்கள் வருத்தப்படுவதாகவும் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியமான விடயங்களில் ஏற்பட்ட பின்னடைவில் கரிசனை கொள்வதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் போன்றவற்றைப் பாதுகாத்தலும், அவற்றின் சுயாதீனத்தைப் பாதுகாத்தலும், அவற்றுக்குப் போதுமான வளங்களை அளித்தலும் முக்கியம் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

 மனித உரிமைகள் நிலைமைகள் மோசமடையும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தொடர்பாக, உயர்ஸ்தானிகரின் கரிசனையைத் தாங்கள் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பாக தீவிர கண்காணிப்பு, சிவில் சமூக நிறுவனங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பாட்டோரை அச்சுறுத்தல் தொடர்பாகத் தாங்கள் மிகவும் வருத்தமடைவதாக மேலும் குறிப்பிட்டுள்ளது. 
இந்நிலையில்இ இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதில்இ இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கவனத்தில் எடுக்குமென ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .