2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திங்கட்கிழமை முதல் சுற்றிவளைப்பு

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, திங்கட்கிழமை (14) முதல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குட்பட்ட 475 மார்க்கங்களில் சுமார் 5,500 பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணிகள் அசௌகரியத்துக்குள்ளாகும் பட்சத்தில், அது குறித்து அறிவிப்பதற்கு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது முறைப்பாடுகளை, 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .