2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தேசமான்ய’ விருதை மீளக் கையளிக்கிறார் தேவநேசன் நேசையா

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட 'தேசமான்ய' விருதை, மீளக் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக, கல்விமானும் முன்னாள் அரச அதிபரும் ஆய்வாளருமான கலாநிதி தேவநேசன் நேசையா தீர்மானித்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்காக ஆற்றிய அதி உன்னதமான, பாராட்டத்தக்க சேவைக்கு உபகாரமாக, கடந்த வருடத்தில், 10 தேசமான்ய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிக் கௌரவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 70 வருடகால அரசியல் வரலாற்றை, மிகவும் நெருக்கடியான நிலைமைக்குத் தள்ளும் வகையில், கடந்த சில தினங்களாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவான் எடுக்கப்பட்டு வரும் தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழை, மீளக் கையளிக்கத் தீர்மானித்ததாக, அவர் அறிவித்துள்ளார்.

தான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் இலங்கைக்குத் திரும்பியவுடன், குறித்த பதக்கத்தையும் சான்றிதழையும், ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .