2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலையொன்றிலிருந்து 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட பொலித்தீனை உற்பத்தி செய்த தொழிற்சாலையொன்று, மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பிரதேசத்திலேயே இத்தொழிற்சாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழிற்சாலையிலிருந்து தடைசெய்யப்பட்ட 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத் தொழிற்சாலையின் உரிமையாளரான பெண்ணிடமிருந்து, குறித்தத் தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டமைக்கான ஆவணங்களோ சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அனுமதிப்பத்திரமோ இல்லையென்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண் இதற்கு முன்னரும் ஹோக்கந்தர பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொழிற்சாலையொன்றை நடத்திச் சென்றதால், நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .