2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘த.தே.கூ-க்கு எதிரான கட்சிகளோடு பேச்சு’

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாகக் கலந்துரையாடும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் நாம் இணைவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வடக்குத் தமிழ்க் கட்சிகளுடனும் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

“பொதுவான சின்னமொன்றிலோ அல்லது கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டது போன்று முன்னணியாகவோ அல்லது வேறு சின்னங்களிலோ போட்டியிடுவது என்பது தொடர்பாக, நாம் முடிவெடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், தமது கட்சி, பொதுவான கூட்டணியொன்றை அமைக்குமெனத் தெரிவித்த அவர், 200க்கும் மேற்பட்ட பிரதேச சபைகளைக் கைப்பற்ற முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், வட்டாரங்களென 170 பிரதேச சபைகளின் இடங்களில் வெற்றிபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், அதை 200ஆக அதிகரிக்க முடியுமெனக் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .