2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நல்லாட்சி மீது ஏமாற்றம்: சுமந்திரன்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பு யோசனையை இன்று கூடிய விசேட அமைச்சரவை நிராகரித்துள்ள நிலையில் தனது, டுவிட்டரில் பதிவொன்றை இட்டு அவர் இதனை இன்று (19) குறிப்பிட்டுள்ளார்.

'உங்களின் சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் மோசமான நிலையில் உள்ளது. வாக்குறுதிகளை கைவிடுவது கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக நடக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதை எப்போதும் கொள்கையாக கொண்டிருக்கும்' என்று தனது பதிவில் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X