2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாடாளுமன்றத்தில் திடீரென செயலிழந்த மின்தூக்கி பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் திடீரென செயலிழந்த  மின்தூக்கியைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மின்தூக்கியை வழங்கிய நிறுவனத்தின் தலையீட்டுடன் இதனை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மின்தூக்கி 15 நிமிடம் செயலிழந்த சம்பவத்தையடுத்தே இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அறிக்கை நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் செயழிலந்த மின்தூக்கி  தொடர்பான பாதுகாப்பு கமரா காணொளிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X