2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கொழும்பு- கண்டி அதிவேகப் பாதை திறப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு-கண்டி அதிவேகப் பாதை திறந்து வைக்கப்படுமென உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல மேம்பாலத்தை மக்கள் பாவனைக்காக இன்று (11) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ தற்போது கொழும்பு- கண்டி அதிவேகப் பாதையின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதியை அமைக்கும் பணி சீன நிறுவனத்திடமும், மீரிகமயிலிருந்து குருநாகல் வரையான பகுதியை அமைக்கும் பணி தேசிய ஒப்பந்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது பகுதி பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரை ஜப்பான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிவேகப் பாதையானது 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்” அமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .