2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நாட்டில் 45514 பேர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் 45514 பேர்  உள்ளனரென்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில் 1108 பேர் பெண்கள் என்றும் 44406 ஆண்களென்றும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை தடுப்பதற்கான கட்டளைச் சட்டத்தின் உப பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கமைய, இரண்டு சந்தர்ப்பங்கள் அல்லது அதற்கு மேலதிகமான சந்தர்ப்பங்களில் குற்றவாளியாகவும் ஒரு சந்தர்ப்பம் அல்லது அதற்கு மேலதிகமான சந்தர்ப்பங்களில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளெனக் கருதப்படுவரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்களின் பெயர்ப்பட்டியல்  நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் ​​வைக்கப்பட்டிருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் தம்மை அந்தப் பட்டியலிலிருந்து விடுவித்துக்கொள்ள 70 வருடங்கள் தொடர்ச்சியாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அவ்வாறு இல்லையாயின், குறித்த குற்றவாளிகள் இறந்த பின்னும் அவர்களின் பெயர்கள் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .