2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பசறை தீ விபத்தில் 3 பெண்கள் கருகினர்

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, பாலித ஆரியவன்ச, பூவேந்தன்

பசறை நகரின் பிரதான வீதியில், எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக உள்ள, வர்த்தக கட்டடத்தொகுதியில், பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் கருகி பலியாகியுள்ளனர்.

அந்த வர்த்தக நிலையத்துடன் இணைந்ததாக, பின்புறமாகவிருந்த அறையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிந்த மூவரே, இவ்வாறு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்த பசறை பொலிஸார், இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை 1:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றனர்.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் தாயாரான கே.பீ.மல்லிகா (வயது 62), அவருடைய சின்னம்மா கே.பீ.சித்ரா (வயது 61) மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளரின் மகள் டீ.எச்.கல்பனா (வயது 23 ) ஆகிய மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அறைகளுக்குள் புகை பரவியுள்ளது. அம்மூவரும், பின்கதவால் தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். எனினும், கதவை மறைத்து, சீமெந்துமூடைகள் அடுக்கப்பட்டிருந்தமையால், அவர்களால் தப்பிச்செல்லமுடியாமல் போயுள்ளதாக அறியமுடிகின்றது.

அதனையடுத்தே மூச்சுத்திணறி, தீயில் கருகிப் பலியாகியிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படைப்பிரிவினர், தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சடலங்​கள் மூன்றையும் மீட்டெடுத்து, பதுளை வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இத்தீவிபத்துக்கு மின்னொழுக்கே காரணமாகவிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றுத் தெரிவித்த பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .