2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது கடினம்!

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக நாட்டிலிருந்து ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில்   இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது,

“ சிறைச்சாலை வன்முறைச் சம்பவம், உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தி யிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது.

மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X