2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பஸ் கட்டண அதிகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை முடிவுகளை மீறும் வகையிலும் தேசிய பஸ் கட்டண கொள்கையை மீறும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள பஸ் கட்டண திருத்தத்திற்கு எதிராக நாளைய தினம் (18) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்யவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அமைச்சரவையாலோ அல்லது ஜனாதிபதியாலோ மட்டுமே மாற்ற முடியும். ஆனால் இரண்டு அரசியல்வாதிகள் இந்த அமைச்சரவை முடிவுகளை மாற்றியுள்ளதாக இந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சரவை அனுமதியானது தேசிய பஸ் கட்டண கொள்கைகளுக்கு அமைய கொண்டுவரப்பட்ட கட்டணமாகும். அதை மாற்றியதன் மூலம் தேசிய கொள்கைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .