2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலையின் குழு இலங்கையில்

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 21 பேர் அடங்கிய குழுவொன்று, மேஜர் ஜெனரல் பியாஸ் உசைன் ஷா தலைமையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின், வெளிநாட்டு சுற்றுலாவின் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இவர்கள், எதிர்வரும் 19ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பில் பயிலும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள், சவுதி அரேபியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சிவில் சேவை அதிகாரிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழு இன்றைய தினம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து, குறித்த குழுவிற்கு, இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் டொக்டர் சாஹிட் அஹமட் ஹஸ்மட்டினால் விளக்கமளிக்கப்பட்டதோடு, இந்த குழு இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகளை சந்திக்கும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X