2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’பியருக்குச் சலுகை வேண்டாம்’

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிர்ஷன் இராமானுஜம்

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், பியர் வகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த சலுகைகளை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்வதாகவும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்றத்தில் நேற்று (13)தெரிவித்தார்.

வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,
"இலங்கையில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்துள்ளதென, தவறான புள்ளிவிவரங்களைக் கொண்டு, நிதி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார். பியர் வகைகளின் விலையைக் குறைப்பதால், பாடசாலை மாணவர்களும் பியர் பாவனையில் ஈடுபடுவதற்கான ஆபத்து ஏற்படுகிறது.

"நாட்டில் 49 சதவீதமானோர், சட்டவிரோத மதுபான பாவனையில் ஈடுபடுவதாக கூறப்படுவது தவறானதாகும். இந்த நாட்டில் 6 சதவீதமானோரே, சட்டவிரோத மதுபாவனையில் ஈடுபடுகின்றனர். எமது நாட்டில் மதுபாவனை செய்வோர், 20 சதவீதமானோர் கூட இல்லை.

"வீதி விபத்துகள் அதிகரிப்பதற்குஈ மதுபாவனையே காரணமாக இருக்கிறது. வீட்டு வன்முறைகள், தற்கொலை செய்துகொள்ளல் போன்றனவும் அதிகரிக்கும் நிலை உருவாகும். அத்துடன் சுகாதார சீர்கேடுகளும அதிகரிக்கும்.

:சுகாதார அமைச்சர் என்ற வகையில் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் எதனையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, பியர் வகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு, நிதி அமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .