2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’பிரஜைகள் சகலருக்கும் சம உரிமை’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பேசப்பட்ட மின்சாரக் கதிரைப் பிரச்சினை, தற்போது தீர்ந்துள்ளதாகத் தெரிவித்த அரசாங்கம், வர்ணக் கண்ணாடியில் திசைப் பக்கம் பார்க்காமல், சகல பிரஜைகளுக்கும் சமனான உரிமைகளை வழங்க வேண்டுமெனவும், இந்த நிலைப்பாட்டில் தான் அரசாங்கம் இருப்பதாகவும் கூறியது.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான இரண்டாம் நாள் குழுநிலை விவாதம், நேற்று (14) நடந்தது.

இதல் கலந்துகொண்டு உரையாற்றிய பொருளாதாரம் மீளமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா, மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, தேசியப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடித்தளம் இட்டுள்ளதாகவும் சமூகப் பொருளாதார வர்த்தகமுறை ஒன்றை அவர் ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பிரதமரால் மாற்றங்காணவுள்ள பொருளாதாரக் கொள்கையானது, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்குமென்றும் இதனூடாக, 13 வருடகால கல்வி நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதுடன், தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள், மத்தியதர வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பனவும் உள்ளடங்குவதாகக் கூறினார்.

மேலும், வடக்கு அபிவிருத்தியை முன்னிட்டு, அதிகளவு காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஹர்ஷ டீ சில்வா, வடக்கில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதுடன் வடக்கில் புதிய வீடுகளை நிர்மாணித்து வருவதாகவும் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டம், வாழைச்சேனை கடதாசிச் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தல் உள்ளிட்ட பல திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

எனவே, பிரச்சினைகளைக் குழப்பங்களை ஏற்படுத்தாமல், நாட்டை முன்னேற்றுவதற்கான பயணத்தில் அனைவரும் இணைவது அவசியமென, அமைச்சர் ஹர்ஷ மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .