2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புகையிரத நிலைய அதிபர்களும் பணிபகிஸ்கரிப்பில்

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரத சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு (6) முதல் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.

இன்று (7) நள்ளிரவு முதல் குறித்த பணிபகிஸ்கரிப்பில் இவர்களும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தத் துறையினரின் சம்பள அதிகரிப்பானது  அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புகையிரத பணிபகிஸ்கரிப்பால்  பாதிப்புக்குள்ளாகியுள்ள பயணிகளின் நன்மைக் கருதி விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்று(7) குறித்த விசேட பஸ் சேவைகளுடன் 5600 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பீ.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .